சிலாபத்தில் இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி! அச்சத்தில் உறவினர்கள்

சிலாபத்தில் இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி! அச்சத்தில் உறவினர்கள்

சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் இரணவில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் ஆனமடுவ பகுதியில் வசிக்கும் 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் கடந்த மாதம் 16 ஆம் திகதி துபாயிலிருந்து இலங்கைக்கு வந்தார்.

இவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்த நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மூன்று பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர், மூன்றாவது பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் 24 ஆம் திகதி வரை அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த மாதம் 10 ஆம் திகதி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எனினும் அவசர நிலை காரணமாக அவர் 17 ஆம் திகதி சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மீண்டும் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது.

அவர் சுயதனிமைப்படுத்தப்பட்ட நேரத்தில் அவரது தாயும் வீட்டில் இருந்துள்ளார்.

இதையடுத்து அவரது தாயார் பி.சி.ஆர் பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். மேலும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர்.

ஆசிரியர் - Editor II