டெலிகிராம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

டெலிகிராம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வாட்ஸ் ஆப் செயலியைப் போன்று பிரபலம் வாய்ந்த குறுஞ்செய்தி செயலியாக டெலிகிராம் விளங்குகின்றது.

எனினும் இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக என்கிரிப்ட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி பரிமாற்றம் செய்ய மறுத்ததற்காக ரஷ்யாவில் அண்மையில் தடை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து VPN தொழில்நுட்பத்தின் ஊடாக டெலிகிராம் அப்பிளிக்கேஷனை ரஷ்யா வாழ் பயனர்கள் பயன்படுத்தி வந்தனர்.

எனவே ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து குறித்த அப்பிளிக்கேஷனை நீக்குமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் ரஷ்ய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது உலகளவில் டெலிகிராம் அப்பிளிக்கேஷனுக்கான புதிய அப்டேட்டை நிறுத்தியுள்ளது.

இந்த தகவலை டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II