தொடர்ந்து போராடும் இங்கிலாந்து

தொடர்ந்து போராடும் இங்கிலாந்து

இங்கிலாந்து சில நாட்களுக்கு முன்பு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடவுள்ள அணியை அறிவித்தது.

எதிர்பார்த்ததைப் போலவே இந்த முறை அணியை வழிநடத்திச் செல்லும் கேப்டனாக ஹாரி கேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த முறை உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 2 டிராக்களுடன் மொத்தம் 26 புள்ளிகளை குவித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியது.

தகுதிச் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணி 18 கோல்களை அடித்த நிலையில் 3 கோல்கள் மட்டுமே வாங்கியது.

இந்த முறை இங்கிலாந்து அணி ஜி பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பிரிவில் பனாமா, பெல்ஜியம், துனீசியா அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் பெல்ஜியம் அணி இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிக்கக்கூடும்.

இங்கிலாந்து அணி உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவது இது 14-வது முறையாகும். 1950-ம் ஆண்டு முதன்முறையாக அறிமுகமான அந்த அணி 1966-ல் சாம்பியன் பட்டம் வென்றது.

அதன் பின்னர் 52 வருடங்களாக கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இம்முறை அந்த தேசத்தின் கனவை நினைவாக்கும் கூடுதல் சுமையுடன் ஹாரி கேன் இந்தத் தொடரை சந்திக்கிறார்.

ஆசிரியர் - Editor II