கார்த்தியின் சகுனி படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை வனிதாவின் மகன்.. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

கார்த்தியின் சகுனி படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை வனிதாவின் மகன்.. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. வாரிசு நடிகராக தமிழ் சினிமாவுக்கு வந்திருந்தாலும் தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக் கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறார்.

கடைசியாக வெளியான கார்த்தி படங்கள் தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வரும் நிலையில் அவரது படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.

கார்த்திக் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி சுமாராக ஓடிய திரைப்படம் சகுனி. தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த கார்த்திக்கு முதலடி இந்த படத்தில் தான்.

பெரிதாக நஷ்டம் இல்லை என்றாலும் எதிர்பார்த்த அளவு படம் ஓடவில்லை. இந்த படத்தில் சமீபத்திய சர்ச்சை நாயகி வனிதாவின் மகன் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சகுனி படத்தில் கார்த்திக் சிறுவயதாக இருக்கும்போது மாமன் மகளை காதலிப்பது போன்று ஒரு பிளாஷ்பேக் காட்சி வரும். அதில் சிறு வயது கார்த்தியாக நடித்தவர் வனிதாவின் மகன் விஜய் ஹரி தானம்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


ஆசிரியர் - Editor II