யோகி பாபு நடித்த ஹீரோவாக நடித்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடி.. ஓடாத படத்துக்கு 100 நாள் போஸ்டரா?

யோகி பாபு நடித்த ஹீரோவாக நடித்த படத்தின் இரண்டாம் பாகம் ரெடி.. ஓடாத படத்துக்கு 100 நாள் போஸ்டரா?

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சமீபகாலமாக கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் ஜோடி போட்ட பிறகு யோகிபாபுவின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு பிறகு யோகி பாபு ஹீரோவாக நடித்த திரைப்படம் தர்ம பிரபு. எமன் கெட்டப்பில் கலக்கியிருந்தார்.

ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் தயாரிப்பாளர் கையை கடிக்காத அளவுக்கு ஓட்டம் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

இதனால் தற்போது தர்மபிரபு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான வேலையில் இறங்கியுள்ளார் இயக்குனர் முத்துக்குமரன்.

யோகிபாபுவின் காமெடிகளும் பெரிய அளவில் ரசிக்கும்படி இல்லை. கடைசியாக கோமாளி படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சமீபத்தில்கூட யோகி பாபு ஹீரோவாக நடித்த காக்டைல் படம் OTTயில் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II