வட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பாரிய பணமோசடி -சிக்கினார் இளைஞன்

வட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பாரிய பணமோசடி -சிக்கினார் இளைஞன்

வட்ஸ்அப் வலையமைப்பின் ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கல்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

வரகாபொல ஹொரகொல்ல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் வட்ஸ் அப் வலையமைப்பு ஊடாக பணமோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் பாசிக்குடா பகுதியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

வட்ஸ்அப் வலையமைப்பின் ஊடாக ஒரு குழுமத்தை அமைத்து கையடக்க தொலைபேசி இலக்கங்களை உள்வாங்கி பணபரிமாற்றம் செய்து அதன் ஊடாக பணத்தை கொள்ளையடித்து இவ்விளைஞர் பலரை ஏமாற்றியுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3 மாதங்களாக வட்ஸ்அப் வலையமைப்புக்கள் ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் - Editor II