கல்கிரியாகம பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டு செயலிழப்பு

கல்கிரியாகம பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டு செயலிழப்பு

கல்கிரியாகம-மஹஇதிகொல்லாகம பிரதேசத்தில் உள்ள விவசாய நிலமொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை குருநாகல் காவல்துறை விசேட பணிக்குழு செயழிலக்கச் செய்துள்ளது.

குறித்த நில உரிமையாளரினால் நேற்றைய தினம் (21) காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து இந்த கைக்குண்டு மீட்கப்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு கைக்குண்டு எவ்வாறு வந்தது, யார் கொண்டு வந்திருப்பார்கள் மற்றும் கொண்டு வந்தவர்களின் நோக்கம் என்ன ஆகிய கோணங்களில் கல்கிரியாகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II