கடான வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பரவல்

கடான வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பரவல்

கடான-களுஆராப்புவ பிரசேத்தில் வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் நேற்று (21) திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் ஒருவர் பரிதாபமான பலியாகியுள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிவந்த ஊழியர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II