ஜனாதிபதியின் அவசர உத்தரவு - உடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகள்

ஜனாதிபதியின் அவசர உத்தரவு - உடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகள்

ஜனாதிபதியின் உத்தரவில் மதுரங்குளி மஹகும்புக்கடவல ஊடாக ஆண்டிகம செல்லும் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்றையதினம் (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை (19) புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மஹகும்புக்கடவல ஊடாக ஆண்டிகம செல்லும் பிரதான வீதியை புனரமைக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த வீதியானது போக்குவரத்து செய்ய முடியாதளவுக்கு மிகவும் குன்றும் குழியுமாக காட்சியளிப்பதாகவும், மழை காலங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் ஜனாதிபதியிடம் கூறப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வீதியை புனரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை (21) காலை குறித்த வீதியை காபட் வீதியாக புனரமைக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான நிமல் லன்சா, சனத் நிஷாந்த பெரேரா, பிரியங்கர ஜயரத்ன, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக்க பியந்த, சிந்தக்க மாயாதுன்ன, புத்தளம் பிரதேச சபைத் தலைவர் அஞ்சன சந்தருவன், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் ஏ.எச்.எம்.ரியாஸ் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை மதுரங்குளி பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியிடம் மதுரங்குளி மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருமாறும், மாதிரி பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்துக் கொடுக்குமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனரமைத்து கொடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும், இரண்டு பாடசாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலத்தையும் அமைத்துக்கொடுக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவு

ஆசிரியர் - Editor II