கொரோனா தொற்று : ஒரேநாளில் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்!

கொரோனா தொற்று : ஒரேநாளில் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் புதிதாக 74 ஆயிரத்து 493 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55  இலட்சத்து 60 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் புதிதாக ஆயிரத்து 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 965  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 44 இலட்சத்து 94 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 9 இலட்சத்து 76 ஆயிரம் பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் - Editor II