குளத்தின் அருகே டிக் டாக் எடுக்க முயன்ற 3 இளைஞர்கள் பரிதாபமாக பலி!

குளத்தின் அருகே டிக் டாக் எடுக்க முயன்ற 3 இளைஞர்கள் பரிதாபமாக பலி!

பாகிஸ்தானில் குளத்தின் அருகே டிக் டாக் காணொளி பதிவு செய்ய முயன்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கெமாரி டவுனில் வசிப்பவர்கள் ஷாஜாத் (23), சஜ்ஜாத் (25) மற்றும் ஜபீர் (18). இவர்கள் ரெய்ஸ் கோத் பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்றனர். அப்போது அங்குள்ள குளத்தின் கரையில் நின்றபடி டிக் டாக் காணோளி பதிவு செய்தனர்.

அப்போது ஒருவர் குளத்தில் தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற 2 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

இதையடுத்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் அவர்களின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசிரியர் - Editor II