மாமியார் நச்சரிப்பால் கூட்டு குடும்பமாக வசித்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை!

மாமியார் நச்சரிப்பால் கூட்டு குடும்பமாக வசித்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை!

தமிழகத்தில் கூட்டு குடும்பமாக வசித்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பெண்ணின் தாயர் மகளின் மரணத்திற்கு மாமியார் மற்றும் மருமகன் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் பேரளத்தை அடுத்த குருங்குளம் வாதண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பானுசந்தர். இவருக்கும் ராதா என்பவருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பானுசந்தர் கோயம்பேட்டில் இருக்கும் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருவதால், மாமியார், மாமானார் ஆகியோருடன் ராதா சென்னையில் கூட்டுக் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊரான வாதண்டூர் கிராமத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் அனைவரும் சென்றுள்ளனர்.

பின்னர், தந்தை மகாலிங்கம் வீட்டில், பானுசந்தர் – ராதா தம்பதியர் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த நிலையில், ராதா வீட்டில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ராதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகளை வரதட்சனை கேட்டு துன்புறுத்தி கொன்றுவிட்டதாகவும், இதற்கு கணவர் பானுசந்தர், மாமியார் மற்றும் குடும்பத்தினரே காரணம் என அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து திருவாரூர் வருவாய் கோட்டாட்சியரின் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. மாமனார் – மாமியார் வீட்டில் குடியிருந்த மருமகள், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் - Editor II