மைத்திரியின் பேஸ்புக் பதிவு பற்றி ஆணைக்குழு இன்று இறுதி முடிவு!

மைத்திரியின் பேஸ்புக் பதிவு பற்றி ஆணைக்குழு இன்று இறுதி முடிவு!

செப்டம்பர் 20 அன்று வெளியிடப்பட்ட ஊடக வெளியீட்டு விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சமீர டி சில்வா மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி தில்ஷன் ஜெயசூரிய நேற்று (22) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவில் கோரினார்.

சிறிசேனவின் அறிக்கை முற்றிலும் பொய்யானது மற்றும் தீங்கிழைக்கும் என்று பெர்னாண்டோவின் வழக்கறிஞர் திங்களன்று (21) ஆணைக்குழுவில் கூறினார். மேலும் இதுபோன்ற அறிக்கை ஆணைக்குழுவின் அதிகாரத்தையும் மரியாதையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறினார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அரச தலைவரின் செய்திக்குறிப்பு தனது வாடிக்கையாளரிடமும் அச்சத்தை உண்டாக்குகிறது என்றும் ஜெயசூரிய கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேன சார்பில் ஆஜரான சட்டத்தரணிமைத்ரி குணரத்ன, ஜெயசூரியவுக்கு நேற்று ஆணைக்குழு முன் பதிலளித்தார்.

தனது வாடிக்கையாளர் எந்த நேரத்திலும் ஆணைக்குழுவின் முன் ஆதாரங்களை வழங்கத் தயாராக உள்ளார் என்று அவர் கூறினார். எனவே, அத்தகைய பத்திரிகை அறிக்கையை வெளியிடுவதன் மூலம் அவர் ஆணைக்குழுவை குறைமதிப்பிற்கு உட்படுத்த விரும்பவில்லை என்றார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன நேற்று இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்ததோடு, ஆணைக்குழு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும்போது வெளியிடப்படும் இதுபோன்ற ஊடக வெளியீடுகள் நீதித்துறைக்கு சமமான ஆணைக்குழுவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஈடுபாடாக கருதப்படலாம் என்றார்.

செப்டம்பர் 19 அன்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆணைக்குழுவிற்கு அளித்த அறிக்கையை கண்டித்து கொழும்பு பேராயர் வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டைக் குறிப்பிட்டு, மைத்திரி குணரத்ன தெரிவிக்கையில்- இதேபோன்ற சம்பவமாகவே சிறிசேனவின் அறிக்கை வெளியானதாக தெரிவித்தார்.

ஏ.எஸ்.ஜி.ஜினசேன, இதேபோன்ற அறிக்கைகளை யாரும் வெளியிட கூடாதென்றார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சட்டத்தின் விதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேற்கூறிய சர்ச்சைக்குரிய ஊடக வெளியீடு சிறிசேனவின் பேஸ்புக் பக்கத்தில் இன்னும் கிடைக்கிறது, அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு தனது பக்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்றார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சமீர டி சில்வாவை ஆணைக்குழுக்கு வரவழைக்குமாறு சட்டத்தரணி ஜெயசூரிய திங்களன்று கோரியதை ஒப்புக் கொண்டதாகவும் அவர் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

அடுத்து, பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, தனது வாடிக்கையாளர் வெளியிட்ட இரண்டு செய்திக்குறிப்புகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கைக்குமிடையில் வித்தியாசம் இருப்பதாகக் கூறினார். இது தம்மைப் பின்பற்றுபவர்களை தெளிவுபடுத்தவும், ஆணைக்குழுவை அவமதிக்கக் கூடாது என்பதற்காகவும் வெளியிடப்பட்டது என்றார்.

மைத்தரி குணரத்னவும்- தனது ஆதரவாளர்களுக்கு தெளிவுபடுத்துவதும், ஆணைக்குழுவின் அதிகாரத்தை அவமதிப்பதில்லை என்பதும் சிறிசேனவின் நோக்கமாகும் என்றார்.

ஏனெனில் பல நாட்களாக ஆணைக்குழுவின் வாக்குலமளிக்கும் ஹேமசிறி பெர்னாண்டோவை குறுக்கு விசாரணை செய்ய அதிக நேரம் எடுக்கும். “இது எனது வாடிக்கையாளரான முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் உருவத்தை சேதப்படுத்துகிறது. ஆனால் ஆணைக்குழுவின் அதிகாரத்தை சேதப்படுத்தினால் அந்த இடுகையை பேஸ்புக்கிலிருந்து அகற்ற நாங்கள் தயாராக உள்ளோம், ”என்று குணரத்ன மேலும் கூறினார்.

அனைத்து விளக்கத்தையும் கருத்தில் கொண்டு, இந்த சம்பவம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு அந்தந்த தரப்பினருக்கு அறிவித்தது.

விசாரணைகளை கேட்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று ஆணைக்குழுவில் ஆஜரானார், அவர் ஒக்டோபர் 5 ம் திகதி சாட்சியங்களை வழங்க அடைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஒக்டோபர் 6 ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவும் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II