சிலாபம் பொது மயானத்திற்கு அருகில் வானிலிருந்து விழுந்த மர்ம வலையினால் பெரும் பரபரப்பு!!

சிலாபம் பொது மயானத்திற்கு அருகில் வானிலிருந்து விழுந்த மர்ம வலையினால் பெரும் பரபரப்பு!!

சிலாபம் பொது மயானத்திற்கு அருகில் வானிலிருந்து விழுந்த மர்ம வலையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (21) இந்த சம்பவம் நடந்தது.

சுமார் 250 அடி நீளமுள்ள வலையொன்றே விழுந்துள்ளது. அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது, வலை விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வலை வானிலிருந்து விழந்ததை அவதானித்ததாக பலரும் தெரிவித்துள்ளனர்.

அந்த மீன் வலையை முதலில் பார்த்தவர், வான் பரப்பிலிருந்து சிலாபம் பகுதி நோக்கி மீன் வலை வந்ததை அவதானித்ததாக தெரிவித்தார்.

மீன் வலை கீழே விழுந்ததும், அதனை கொண்டு செல்ல பலரும் முயற்சித்த போதும், சிலாபம் நகரசபை காவலாளி அதற்கு இடமளிக்காமல், நகரசபை தலைவருக்கு தொலைபேசியில் அறிவித்தார்.

முடிச்சுக்கள் இல்லாத, கிழிந்தால் மீண்டும் தைக்க முடியாத வலை இது. அத்துடன், இலங்கை மீனவர்கள் இந்த வகை வலைகளை பயன்படுத்துவதில்லை.

நைலோன் நூலினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வலை தாய்வான், சீனா அல்லது இந்தியா பகுதி மீனவர்கள் பயன்படுத்துவது என கூறப்படுகிறது.

ஆசிரியர் - Editor II