முடக்கு வாதம் உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா?

முடக்கு வாதம் உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா?

இன்றைக்கு உடல் நலம் குறித்த விழிப்புணர்வு ஏறத்தாழ பெரும்பாலோனோருக்கு உள்ளது.

மனிதன் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று உணவுதான்.

மனிதர்களை வாழவைப்பதுதான் உணவின் வேலை ஆனால் சிலசமயம் நாம் செய்யும் தவறுகளால் அந்த உணவே விஷமாக மாறி வந்துகொண்டிருக்கிறது.

அப்படி ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்

  • சிவப்பு இறைச்சியை அதிகமாக எடுத்துக் கொள்வதால் முடக்கு வாதம் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது. ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பல சிக்கலை சந்திக்க நேரிடும். இதற்குக் காரணம், சிவப்பு இறைச்சியில் அதிக ப்யுரின் இருக்கிறது. மேலும், இதில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் எடை அதிகரிப்பு உண்டு பண்ணும்.
  • கடல் உணவுகளில் பொதுவாக விரும்பி சுவைக்கப்படும் மட்டி மீன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். கடல் உணவில் அதிக அளவு ப்யுரின் இருக்கிறது.
  • இந்த வகை பொருட்கள் உடலில் யூரிக் அமிலமாக மாற்றம் பெறும். இத்தகைய கூறுகள் உடலில் அதிகரித்து வலி மற்றும் வீக்கத்தை மேலும் மோசமடைய வைக்கும்.
  • முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பீர் அருந்துவதை தவிர்த்து விடுவது நல்லது, இந்த பானம் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். அதன் கலவைகள் நேரடியாக மூட்டுகளின் அழற்சியின் செயல்களை பாதிக்கும். அதே நேரத்தில் விறைப்பு மற்றும் இயக்கத்தின் சிரமம் போன்றவை அதிகரிக்குமாம்.
  • சில வகையான மீன், வீக்கம் மற்றும் வலியைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்றாலும், யூரிக் அமிலக் அதிகரிப்பைக் கொண்ட நோயாளிகளுக்கு வெள்ளை மீன் தீங்கு விளைவிக்கக் கூடும்.
  • இந்த வகை மீன்களில் 50 முதல் 150 மில்லி கிராம் அளவு ப்யுரின் இருக்கிறது. ஆகவே இதனை உட்கொள்வதால் முடக்கு வாதத்திற்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சை பலன் கொடுப்பதில்லை. மாறாக இதன் அறிகுறிகள் அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
  • கீல்வாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் காளான் சாப்பிடவே கூடாது. காளான்கள் மூட்டுகளில் யூரிக் அமில படிகங்களின் படிவை அதிகரிக்கும் என்பதே இதற்குக் காரணம்.
  • இரும்பு சத்து குறைபாடால் ஏற்படும் இரத்த சோகை உள்ளவர்களுக்கு கல்லீரல் பரிந்துரைக்கப்படும். ஆனால் முடக்கு வாதம் உள்ளவர்கள் இந்த உணவை தவிர்ப்பது சிறந்தது.
ஆசிரியர் - Editor II