பிரான்ஸில் கனமழை : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்

பிரான்ஸில் கனமழை : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்

பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தெருக்கள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், அணையிலிருந்து திறக்கப்பட்ட வெள்ளம் போல பேரோசையுடன் சீறிப்பாய்கிறது.

பிரான்சிலுள்ள Morlaix என்னும் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை இரண்டே நாளில் பெய்துள்ளதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்சின் தேசிய வானிலை ஆராய்ச்சி மையமான Meteo France, பிரான்சின் சில பகுதிகளில் இன்னும் புயல் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் போது பாதுகாப்பாக இருக்குமாறும் மின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை யாருக்கும் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

ஆசிரியர் - Editor