செவ்வாயின் ஆழமான பகுதிகளை ஆய்வு செய்வதற்கு MarCO-A மற்றும் MarCO-B எனும் இரு சிறிய ரக செயற்கைக்கோள்கள்

செவ்வாயின் ஆழமான பகுதிகளை ஆய்வு செய்வதற்கு MarCO-A மற்றும் MarCO-B எனும் இரு சிறிய ரக செயற்கைக்கோள்கள்

ஏற்கனவே கியூரியோசிட்டி ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தினை ஆய்வு செய்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் செவ்வாயின் ஆழமான பகுதிகளை ஆய்வு செய்வதற்கு MarCO-A மற்றும் MarCO-B எனும் இரு சிறிய ரக செயற்கைக்கோள்களை நாசா நிறுவனம் அனுப்பி வைத்திருந்தது.

இவ்விரு செயற்கைக்கோள்களும் தற்போது செவ்வாய் கிரகத்தினை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் ஐந்தாம் திகதி இச் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது.

எதிர்வரும் நொவெம்பர் மாதம் 26ம் திகதி செவ்வாய் கிரகத்தினை சென்றடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏவப்பட்டு ஒரு மாத காலம் ஆன நிலையில் எவ்வித பிரச்சினையும் இன்றி தொடர்ந்து பயணிப்பதால் இரு செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக தரையிறங்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor