ஆஸ்திரேலியாவின் M S தோனி இவர் தானாம், இந்த ஐபிஎல்லில் எந்த டீம் தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் M S தோனி இவர் தானாம், இந்த ஐபிஎல்லில் எந்த டீம் தெரியுமா?

கிரிக்கெட் பொறுத்தவரை திறமையுடன் பல வீரர்கள் இருந்தாலும், ஒரு சிலரை தான் அனைவருக்கும் பிடிக்கும். தனது டீம், நாட்டு ரசிகர்கள் என்ற எல்லையை கடந்து உலகளவில் ரசிகர்கள் இருப்பார்கள். இது போன்ற வீரர்களை எதிர் டீமுக்கு கூட பிடிக்கும். நம் இந்தியாவில் சச்சின், தோனி ஆகியோர் அடக்கம்.

இந்திய டீம்மில் அடுத்த தோனி யார் என நாம் விவாதித்துக்கொண்டு இருக்க, பல டீம்கள் தங்கள் அணியில் தோனி போன்ற வீரர் உண்டு என மார் தட்டும் சம்பவமும் அவ்வப்பொழுது நடந்து தான் வருகின்றது.

சமீபத்தில் கொரானா தாக்கம் முடிந்த பின் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்தது. அந்த போட்டி நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் சக வீரர் பற்றி கூறியது பின்வருமாறு.

நாங்கள் இதைப்பற்றி சமீபகாலமாக பேசி வருகிறோம். எங்கள் டீம்மில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையான வீரர்கள், லோக்கல் மேட்சுகளில் நன்றாக விளையாடி வருகிறார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருப்பவர் நன்றாக அடித்து ஆட வேண்டும். நாங்கள் எம்எஸ் தோனி போன்ற ஒருவரை கண்டுபிடித்து விட்டோம். அத்தகைய வீரர்தான் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்.

இதுபோன்றது ஒரு இரவில் நடக்கப்போவதில்லை. ஏனெனில் 300 முதல் 400 போட்டிகளில் விளையாட வேண்டும், அப்பொழுதே திறன் மெழுகேரும். ஸ்டோய்னிஸ் அவர்களை தொடர்ந்து நாங்கள் வளர்த்து வருகிறோம், ஒரு கட்டத்தில் அவர் தோனியை போல மாறி விடுவார். தற்போது நாங்கள் வைத்திருக்கும் அணியும் சரியான அணி. எங்கள் தோனி மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் தான்.” எனதெரிவித்துள்ளார் பேட் கம்மின்ஸ்.


ஸ்டோய்னிஸ் சிறந்த ஆல் ரௌண்டார். ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அந்த தொடரில் இவரை டாப் ஆர்டரில் ஆட வைத்தனர். பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங்கில் அசத்தும் இவர் டெல்லி காப்பிடல்ஸ் டீமுக்காக ஐபிஎல் இல் ஆடி வருகிறார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயருக்கு பக்க பலமாக செயல்படுவது கூடுதல் பிளஸ். ஆஸ்திரேலிய டி 20 டீம்மின் அடுத்த கேப்டன் இவர் தான் எனவும் பேச்சு அடிபடுகிறது.

ஆசிரியர் - Editor II