குட்டி இளவரசர் ஜார்ஜ், சார்லோட்டுக்கு புதிய தடை

குட்டி இளவரசர் ஜார்ஜ், சார்லோட்டுக்கு புதிய தடை

குட்டி இளவரசர் ஜார்ஜ், சார்லோட்டுக்கு புதிய தடை விதித்த பிரித்தானிய மகாராணி

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசர் சார்லோட் ஆகிய இருவரும் இனி தங்கள் பெற்றோருடன் அமர்ந்து அரச குடும்பத்து உணவுகளை சாப்பிடக்கூடாது என மகாராணியால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குட்டி இளவரசரின் வயது 4 மற்றும் சார்லோட்டின் வயது 3. இவர்கள் இருவரும் கடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தயாரிக்கப்பட்ட 7 வகையான உணவுகளை முறையாக அமர்ந்து சாப்பிடவில்லை.

இது பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை. மேலும் அரச குடும்பத்தில் குழந்தைகளுக்கென தனி அறை ஒதுக்கப்படும். அதுபோன்று தற்போது ஜார்ஜ் மற்றும் சார்லோட் ஆகிய இருவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோருடன் அமர்ந்து அரச குடும்பத்து உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும் முறையாக உணவருந்துவதை கற்றுக்கொள்ள வேண்டு என பிரித்தானிய மகாராணியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இளம் வயதிலேயே இரண்டு மொழிகளை சரளமாக பேசும் திறனை இவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். குட்டி இளவரசி சார்லோட் தற்போது Spanish மொழியையும் கற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor