இந்த சாதனம் இருந்தால் பொருட்கள் திருடு போகாதாம்

இந்த சாதனம் இருந்தால் பொருட்கள் திருடு போகாதாம்

Digitek நிறுவனம் அறிமுகம் செய்துள்ள குட்டி சாதனம் இருந்தால், பொருட்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஸ்மார்ட்போன்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இந்நிலையில், மடிக்கணினி மற்றும் இதர சாதனங்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ள Anti Lost Wireless Tracker அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Digitek நிறுவனம் இந்த சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தைக் கொண்டு களவு போகும் சாதனங்களை எளிதாக கண்டறிய முடியும். இந்த சாதனம் Digitek Tracker செயலியுடன் இணைக்கப்படுகிறது.

இந்த சாதனத்தை Key Chain, Wallet, Laptop மற்றும் இதர சாதனங்களில் இணைத்துக் கொள்ளலாம்.

கைப்பேசி செயலியுடன் இணைக்கப்பட்டால், Tracker இருக்கும் இடத்தை கண்டறிய முடியும். மின்சாதனங்கள் மட்டுமின்றி, இந்த சாதனம் கொண்டு கார்களை பாதுகாக்க முடியும். Anti Lost Wireless Tracker சாதனத்தில் உள்ள In-Build அலாரம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் சீராக வேலை செய்யும்.

எனினும், இது வேலை செய்யும் எல்லை அளவுகளை மாற்றியமைக்க முடியும். அதிகபட்சமாக, 30 மீட்டர்கள் பரப்பளவில் இயங்கும் Tracker, நிர்ணயிக்கப்பட்ட எல்லையை கடக்கும்போது ஸ்மார்ட்போனில் அலாரம் அடிக்கும்.

எந்த சாதனத்தை Anti Lost Wireless Tracker-ஐ இணைத்தால், நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் அச்சாதனம் அசைந்தால் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படும்.

Anti Lost Wireless Tracker சாதனத்தைப் பயன்படுத்தி, Remote முறையில் ஸ்மார்ட்போன்களில் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கவும் முடியும். இதற்காக ஒரு பொத்தானை அழுத்தினால் போதும்.

Anti Lost Wireless Tracker-க்கான செயலியை Google Play Store மற்றும் Apple App Store-களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த சாதனத்தை கருப்பு அல்லது வெள்ளை நிறங்களில் வாங்க முடியும்

ஆசிரியர் - Editor