ஜிமெயிலில் இச் சேவையை இனி பயன்படுத்த முடியாது

ஜிமெயிலில் இச் சேவையை இனி பயன்படுத்த முடியாது

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவை தொடர்ந்தும் பிரபலமானதாக விளங்குகின்றது.

இச் சேவையினை இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தக்கூடிய வகையில் சில வாரங்களுக்கு முன்னர் புதிய வடிவமைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் முன்னர் காணப்பட்ட பழைய வடிவமைப்பினை முழுமையாக நிறுத்தவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

ஏற்கணவே கட்டணம் செலுத்தி ஜிமெயில் சேவையை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும் விரைவில் புதிய வடிவமைப்பிற்கு மாறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் மாதம் முதல் பழைய வடிவமைப்பு பயன்பாட்டில் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor