ஏலத்திற்கு Apple-1 கணினி

ஏலத்திற்கு Apple-1 கணினி

தனிநபர் கணினி வடிவமைப்பிற்கு அடித்தளமிட்ட Apple-1 கணினியினை Foundation for Amateur International Radio Service எனும் நிறுவனம் ஏலத்திற்கு விட்டுள்ளது.

இக் கணினியானது ஆப்பிள் நிறுவனத்தின் Wozniak மற்றும் Steve Jobs ஆகியோர் தொழில்நுட்ப உலகில் காலடி பதித்தபோது உருவாக்கப்பட்டதாகும்.

Duston 2 எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த கணினியானது 1976ம் ஆண்டு காலப் பகுதியில் உருவாக்கப்பட்டது.

இதனை Charitybuzz எனும் தளத்தினூடாக ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தொகையாக 70,000 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏலத்தொகையானது 600,000 டொலர்கள் வரை அதிகரிக்கும் என Charitybuzz நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

ஆசிரியர் - Editor