விராட் கோஹ்லிக்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் அறிவுரை

விராட் கோஹ்லிக்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் அறிவுரை

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் சாதிக்க, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இம்மாதம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடும் இந்தியா அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்காக விராட் கோஹ்லி தயாராகும் விதமாக, கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடுவதாக இருந்தது. ஆனால், ஐ.பி.எல் தொடரின் போது ஏற்பட்ட காயத்தினால் கவுண்டி கிரிக்கெட்டில் கோஹ்லியால் பங்கேற்க முடியவில்லை.

அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில், கோஹ்லி இங்கிலாந்து நாட்டில் சிறப்பாக விளையாட அவுஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் மெக்ராத் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கோஹ்லி இப்போது மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். தரமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இங்கிலாந்து நிலைமைகள் மிகவும் கடினமானவை.

ஆண்டர்சன் போன்ற ஒரு சிறந்த பந்துவீச்சாளர் இருக்கும்போது, அது எதிரணிக்கு கடினமான வேலையாக இருக்கும். நீங்கள் கடுமையாக உழைக்க தயாராக இருக்க வேண்டும். கோஹ்லி ஒரு தரம் வாய்ந்த வீரர். எனவே ஒரு நல்ல போட்டியை காண காத்திருக்கிறேன்.

இந்திய அணியில் சில தரமான வீரர்கள் உள்ளனர். ஆனால், ஒரு வீரரை நம்பி இருப்பதால் அவர்கள் தவறு செய்கிறார்கள். இந்த நாட்களில் நீங்கள் விரைவாக தன்மைக்கு ஏற்ப மாற வேண்டும்.

என் காலத்தில் இரண்டு அல்லது மூன்று வெளிநாடு போட்டிகள் தான் கிடைக்கும். எனவே, நாங்கள் மிக விரைவாக தன்மைக்கு ஏற்ப மாற வேண்டும். உண்மையில் நிலைமைகளை பயன்படுத்த போதுமான வெளிநாட்டு போட்டிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் கடந்த கால அனுபவத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்.

ஆசிரியர் - Editor