முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ்

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ்

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்கள் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.

இதில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிரைக் பிரத்வைய்டும், டேவன் ஸ்மித்தும் களமிறங்கினார்கள்.

இருவரும் முறையே 3 மற்றும் 7 என்ற சொற்ப ஓட்டங்களில் அவுட்டானார்கள்.

பின்னர் வந்த வீரர்கள் ஓரளவு ஓட்டங்களை சேர்ந்தார்கள்.

நேற்றைய முதல் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 84 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 246 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இலங்கை சார்பில் லஹிரு குமரா 3 விக்கெட்களும், சுரங்கா லக்மல் மற்றும் ரங்கனா ஹெரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களும் வீழ்த்தினார்கள்.

ஆசிரியர் - Editor