தற்கொலைக்கு உதவும் சுவிஸ் நிறுவனம்

தற்கொலைக்கு உதவும் சுவிஸ் நிறுவனம்

வாழ விரும்பாதவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்து கொள்ள உதவும் சுவிஸ் அமைப்புகளில் ஒன்றான Dignitas சிக்கலில் சிக்கியுள்ளது.

Dignitasஇன் நிறுவனரான Ludwig Minelli, ஜேர்மானியப் பெண் ஒருவர் அந்த அமைப்புக்காக 100,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அளிப்பதாக தனது உயிலில் எழுதி வைத்ததையடுத்து அவரது தற்கொலைக்கு உதவியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூன்று சுவிஸ் மருத்துவர்கள் அதர்மமானது என்று கூறி அந்த ஜேர்மன் பெண்ணின் தற்கொலைக்கு உதவ மறுத்தும் நான்காவது ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்து அவரது மரணத்திற்கு உதவியதாக Ludwig Minelli மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நோய் எதுவும் இல்லாத நிலையிலும் பணத்துக்கு ஆசைப்பட்டு Ludwig Minelli இதை செய்து விட்டதாக அவர் மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அது மட்டுமின்றி ஜேர்மனியில் தனது கணவரின் கல்லறை அருகில் தனது சாம்பலை புதைக்க வேண்டும் என்னும் அந்தப் பெண்மணியின் கோரிக்கையையும் அவர் நிறைவேற்றவில்லை.

அதற்கு பதிலாக அவரது சாம்பல் சூரிச் ஏரியில் கரைக்கப்பட்டது. இது தவிர ஜேர்மனியைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது மகளின் தற்கொலைகளுக்காக

11,000 சுவிஸ் ஃப்ராங்குகள் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது வழக்கமான தொகையைவிட இரண்டு மடங்கு ஆகும்.

வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக அவர்கள் அந்த தொகையை கொடுக்க முன்வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Ludwig Minelli தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில் அதிகாரிகள் பெரும் தொகை ஒன்றை அபராதமாக விதிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆசிரியர் - Editor