கனடா பிரதமரை அசரடித்த டிரம்ப்

கனடா பிரதமரை அசரடித்த டிரம்ப்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் நீங்கள் வெள்ளை மாளிகைக்கு தீவைக்கவில்லையா என பழைய வரலாற்று நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் டிரம்ப் பேசியுள்ளார்.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யும் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு தேசிய பாதுகாப்பு நலன் கருதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கட்டணம் நிர்ணயித்தார்.

இது குறித்து கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 25-ஆம் திகதி டிரம்பிடம் போனில் பேசியுள்ளார்.

அப்போது, தேசிய பாதுகாப்பு நலன் கருதி கட்டணம் நிர்ணயிப்பதை எப்படி நியாயப்படுத்த போகிறீர்கள் என ட்ரூடோ கேட்டுள்ளார்.

அதற்கு நீங்கள் வெள்ளை மாளிகைக்கு தீ வைக்கவில்லையா என டிரம்ப் அவரிடம் கேட்டுள்ளார்.

டிரம்ப் கூறிய வெள்ளை மாளிகை தீவைப்பு நிகழ்வு கடந்த 1812-ஆம் ஆண்டு ஒரு போரின் போது அப்போதைய பிரித்தானிய ஆங்கிலேயர்கள் வாஷிங்டன் மீது தாக்குதல் நடத்திய போது செய்யப்பட்டதாகும்.

இந்த தாக்குதலை குறிப்பிட்டு தான் டிரம்ப் ட்ரூடோவிடம் அப்படி கேட்டுள்ளார்.

இந்த தாக்குதலானது கனடாவின் ஒன்றாறியோவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தரப்பட்ட பதிலடி தான்.

இதை மனதில் வைத்தே வெள்ளை மாளிகையை எரித்தது கனடா என்ற ரீதியில் டிரம்ப் ட்ரூடோவிடம் கேட்டுள்ளார்

ஆசிரியர் - Editor