சுவிஸில் தீவிரமடையும் கொரோனா பரவல்..!!!

சுவிஸில் தீவிரமடையும் கொரோனா பரவல்..!!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்கள் உச்சநிலையை அடைந்து வருவதால் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சூரிச் நுண்ணுயிரியல் பேராசிரியர் மார்ட்டின் அக்கர்மன் எச்சரித்துள்ளார்.

“நான் கவலைப்படுகிறேன் நாங்கள் ஒரு முக்கியமான தருணத்தில் இப்போது இருக்கிறோம்” என்று மார்ட்டின் அக்கர்மன் இன்று சனிக்கிழமை சுவிஸ் வானொலி ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றியேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாம் விரைவாகவும் சரியாகவும் செயல்படுவது முக்கியம் இந்த வாரம் சுவிட்சர்லாந்தில் புதிய தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை ஆரம்ப கால (வசந்த காலம்) தொற்றுநோயின் உச்ச நிலைக்குப் பின்னர் முதல் முறையாக 1,000 திற்கு மேல் உயர்ந்ததுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 1,487 புதிய கொரோனா தொற்றாளர்கள் சுவிட்சலர்ந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாகக் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II