சுவிஸில் கொரோனா அதிகம் பாதித்த பகுதி மக்கள் கண்ணீர்

சுவிஸில் கொரோனா அதிகம் பாதித்த பகுதி மக்கள் கண்ணீர்

சுவிட்சர்லாந்தில் கொரோனா அதிகம் பாதித்த மண்டலங்களில் ஒன்றான Schwyz பகுதி மக்கள் தங்களை காப்பாற்றும்படி கண்ணீர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுவிஸில் Schwyz மண்டலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரே நாளில் 198-ல் இருந்து 258 என கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மண்டலத்தின் உள்விவகாரத்துறையும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளது.

மண்டலத்தின் உள் பகுதியில் உள்ள தொற்றுநோய் நிலைமை குறிப்பாக நிலையற்றதாக காணப்படுகிறது. மட்டுமின்றி வார இறுதி நாட்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மண்டல மக்களை இந்த கொரோனா காலகட்டத்தில் எச்சரிக்கையுடன் மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத பகுதிகளில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும் அதிகமானோர் தனிமைப்படுத்தலில் இருப்பதால் பொருளாதார இழப்புகள் தலைதூக்கியுள்ளது.

மண்டலத்தில் பொதுமக்களில் பலரும் உடல்நலக் கோளாறால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கண்டிப்பாக மண்டல நிர்வாகமும் பெடரல் அரசாங்கமும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் பலர் முன்வைத்துள்ளனர்.

ஆசிரியர் - Editor II