புளித்த உணவுகள் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகமாக்குமா?

புளித்த உணவுகள் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகமாக்குமா?

கோவிட் 19 பரவி வரும் நிலையில் அது குறித்த தகவல்களில் நிறைய குழப்பங்களும் நிலவி வருகிறது.

கோவிட் 19 பற்றி முழுமையாக புரிந்து கொள்வதே அந்த நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே நம் கையில் இருக்கும் சிறந்த வழி. இதனால் மக்களும் தங்கள் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க நிறைய நோயெதிர்ப்பு சக்தி பானங்கள், மூலிகை பொருட்கள் என எடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக புளித்த உணவுகள் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாக்டீரியா, ஈஸ்ட் அல்லது பிற உயிருள்ள நுண்ணுயிரிகள் அதன் சர்க்கரையை உடைத்து ஆல்கஹால் மற்றும் அமிலமாக மாற்றும்போது அந்த உணவானது புளிக்கிறது. தயிர், கேஃபிர், சார்க்ராட் மற்றும் சில வகையான சீஸ் ஆகியவை புளித்த உணவுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. அவை லாக்டிக் அமில பாக்டீரியா மற்றும் பிற உயிருள்ள நுண்ணுயிரிகளால் ஏற்படுகின்றன. இவை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கின்றன என்று ஆராய்ச்சி கூறுகிறது. நமது செரிமான அமைப்பை மேம்படுத்துதல், எடை இழப்பை அதிகரித்தல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை புதுப்பித்தல் ஆகியவை இந்த பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய சில சுகாதார பயன்கள் ஆகும்.

ஜெர்மனியில் உள்ள லைப்ஜிக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின்படி, புளித்த உணவுகளில் காணப்படும் லாக்டிக் அமில பாக்டீரியா செரிமான மண்டலத்தில் ஒரு அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் எச்.சி.ஏ 3 ஏற்பிகள் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்களில் காணப்படும் புரதங்களுடன் நன்றாக பிணைக்கிறது.

சில புளித்த உணவுகள் தொற்றுநோயைப் பிடிக்கும் அபாயத்தைக் குறைக்கின்றன என்பதையும் அறிவியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. அவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால். புளித்த முட்டைகோஸ் மற்றும் கிம்ச்சி போன்றவைகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். புளித்த உணவுகள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை அதிகரிக்கின்றன.

சில புளித்த உணவுகள்

புளித்த உணவுகள் நம் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இது நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது.

புளித்த முட்டைகோஸ்

இது முட்டைகோஸ் மற்றும் உப்பு போன்ற பொருட்களை நொதிக்க வைப்பதன் மூலம் பெறப்படுகிறது. இது உங்க குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அதிக நார்ச்சத்துக்களை வழங்குகிறது.

கிம்ச்சி

இந்த நொதித்த உணவும் முட்டைகோஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு காரமான உணவாகும். இதை பர்கருடன் சேர்த்து சாப்பிடலாம்.

​கெஃபிர்

இது ஒரு பால் சார்ந்த பானம் ஆகும். இதில் கெஃபிர் என்ற பொருளை பயன்படுத்தி பாலை புளிக்க செய்து தயாரிக்கின்றனர். ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் அதன் லாக்டோஸை உடைப்பதன் விளைவாக புளித்த பானம் தயாராகுகிறது. இது நிறைய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருளாகும். இது உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது.

​சோயா பீன்ஸ் நொதித்தல்

இந்த உணவில் இயற்கையாக சோயா பீன்ஸை நொதிக்க செய்து பயன்படுத்துகின்றனர். இது சுவையானது அமினோ அமிலங்கள், புரதங்கள் நிறைந்த நல்ல மூலதனமாக இந்த உணவு விளங்குகிறது.

​யோகார்ட்

இது தயிர் மற்றும் புளித்த பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதிலுள்ள புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் செரிமானத்திற்கு உதவுகிறது.

மேற்கண்ட புளித்த உணவுகள் உங்களை நோய்த் தொற்றில் இருந்து காப்பாற்ற உதவி செய்யும்.

ஆசிரியர் - Editor II