கூலித் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை!

கூலித் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகன் தமிழக அரசுப் பள்ளிகள் அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  A. வாடிப்பட்டியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி – மகேஸ்வரி தம்பதியின் மூத்த மகன் ஜீவித் குமார், பெரியகுளம் அருகே உள்ள சில்வர்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். தற்போது நடந்த நீட் தேர்வில் பங்கேற்ற அவர் 720க்கு 664 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடமும், இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1823 வது  இடமும் பிடித்துள்ளார். 

தமிழகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஒரு சிறு கிராமத்தில் பிறந்து இந்திய அளவில் மதிப்பெண் பட்டியலில் இடம் பிடித்து தமிழகத்தில் முதல் மாணவனாக வந்த ஜீவித் குமாரை பள்ளியின் தலைமை ஆசிரியர்  ஆசிரியர்கள் பெற்றோர் சமூக ஆர்வலர்கள்.என அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.ஜீவித் குமார் தந்தை நாராயணமூர்த்தி இவர் ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி தாய் மகேமேஸ்வரி தையல் தொழில் செய்பவர் சகோதரி ஷர்மிளா தேவி பிஎஸ்சி கணிதம் பாடபிரிவில் பட்ட படித்து வருகின்றார் தம்பி தீபன் 10 ஆம் வகுப்பு  சில்லுவார்பட்டி அரசு மாதிரிமேல்நிலை  பள்ளியில் பயின்று வருகின்றார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜீவித் குமார் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அரசுப்பள்ளியில் தமிழகத்தில் முதல் மாணவனாகவும் இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் 1823வது  இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II