ஏழைகளின் வாழ்வு ஏற்றம் பெறவேண்டும்- பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து

ஏழைகளின் வாழ்வு ஏற்றம் பெறவேண்டும்- பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து

இந்துக்களின் முக்கிய திருவிழாவான நவராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது. இதையொட்டி பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் உற்சவங்கள், கொலு கண்காட்சிகள் தொடங்கி உள்ளன. நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-

 நவராத்திரியின் முதல் நாளான இன்று மாதா சைல புத்ரியை (அன்னை பார்வதி) வணங்குகிறேன். அன்னையின் ஆசீர்வாதங்களுடன், நமது பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்கட்டும். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர அன்னையின் ஆசீர்வாதங்கள் நமக்கு பலம் அளிக்கட்டும்.

 இவ்வாறு மோடி கூறி உள்ளார்.

 அத்துடன், மாதா சைலபுத்ரியை போற்றும் பாடலுடன் கூடிய புகைப்பட வீடியோவையும் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II