திடீரென வலியால் துடித்த சுரேஷ் சக்கரவர்த்தி… பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ்…!

திடீரென வலியால் துடித்த சுரேஷ் சக்கரவர்த்தி… பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ்…!
பிக்பாஸ் வீட்டில் அடுத்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்கில் ரியோ, வேல்முருகன் மற்றும் கேப்ரியலா ஆகியோர் போட்டியிட்டனர். அப்போது கேப்ரியலாவுக்கு சுரேஷ் சக்ரவர்த்தி மட்டுமே ஆதரவு தெரிவித்தார்.

அதன் பின் போட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தி கேப்ரியலாவை தூக்கி கொண்டு இருக்க வேண்டும். ஆனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு கேப்ரியலா ஏற மறுத்தார். ஆனால் சுரேஷ் அவரை திட்டி ஊக்குவித்து போட்டியில் பங்கேற்க வைத்தார்.அதன் பின் 10 நிமிடங்களுக்கு முன்னே கேப்ரியலா இறங்கிவிட்டார். அதன் பின் கண்ணீருடன் அவர் சுரேஷுக்கு நன்றி கூறினார்.இறுதியில் அந்த டாஸ்கில் ரியோ வெற்றிபெற்று அடுத்த வார தலைவர் ஆனார்.

சுரேஷ் சக்ரவர்த்தி கேப்ரியலாவை தூக்கி கொண்டு இருந்த காரணத்தினால் அதற்கு பிறகு வலியால் துடித்தார். அப்போது அர்ச்சனா அவருக்கு கையில் மருந்து தேய்த்து விட்டார். அவர் வலியுடன் இருப்பதை பார்த்து கேப்ரியலாவுக்கு இன்னும் கண்ணீர் வந்தது. அதற்கு சுரேஷ் சமாதானம் கூறினார்.

அப்போது கையில் ஆயின்மெண்ட்டுடன் வந்த அர்ச்சனா அதை சுரேஷ் கையில் தடவி லேசாக பிடித்து விட்டார். அர்ச்சனா அப்படி செய்யும்போது வலி பொறுக்காமல் சுரேஷ் கண்கலங்க அதைப்பார்த்து சுற்றி இருந்தவர்கள் அனைவரும் பதறிப்போயினர். கேப்ரியலா அழவே ஆரம்பித்து விட்டார். ஆனால் அந்த சூழ்நிலையிலும் காலைல இருப்பேனோ இல்லையோ? என சுரேஷ் ஜோக்கடித்தார். தொடர்ந்து அவருக்காக கிச்சன் சென்ற கேப்ரியலா அவருக்கு வெந்நீர் காயவைத்து கொண்டு வந்து கொடுத்தார்.

சிறிது நேரத்திலேயே சுரேஷ் நார்மல் மோடுக்கு வந்து விட்டாலும் அவ்வளவு வலியையும் பொறுத்துக்கொண்டு அவர் கேப்ரியலாவை உப்புமூட்டை தூக்கியது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர் - Editor II