நியூஸிலாந்து பொதுத்தேர்தலில் மீண்டும் பிரதமராகும் ஜெசிந்தா ஆர்டன்..!!

நியூஸிலாந்து பொதுத்தேர்தலில் மீண்டும் பிரதமராகும் ஜெசிந்தா ஆர்டன்..!!

நியூஸிலாந்து பொதுத்தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மீண்டும் அபார வெற்றி பெற்றுள்ளாரென அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

நியூஸிலாந்தில் கடந்த மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் கொரோனா அச்சம் காரணமாக பிற்போடப்பட்ட நிலையில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பிரஜைகள் தமது வாக்கினை பதிவு செய்திருந்த நிலையில், ஜெசிந்தா ஆர்டனின் தொழிற்கட்சி 49 வீத வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை வாக்குகளால் அமோக வெற்றி பெற்றுள்ளதுடன், எதிர்க்கட்சியான இடதுசாரிக் கட்சி 27 வீத வாக்குகளை பெற்றுள்ளது.

கொரோனா தொற்றை முறையாக கட்டுப்படுத்தியமையால் இம்முறை தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் வெற்றி பெறுவார் என ஏற்கனவே கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II