மின்னல் தாக்கியதில் இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

மின்னல் தாக்கியதில் இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

இந்தியாவில் மின்னல் தாக்கியதில் இளம் கிரிக்கெட் வீரர் மைதானத்திலேயே பலியான சம்பவம் நடந்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் ஹீக்ளி மாவட்டத்தில் உள்ள செரம்போரை சேர்ந்தவர் தேபாப்ரதா பால்(வயது 21).

ஆல்ரவுண்டரான இவர், கிரிக்கெட்டில் பயிற்சி பெறுவதற்காக தெற்கு கொல்கத்தாவில் உள்ள அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார்.

நேற்று மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மின்னல் தாக்கியதில் சுருண்டு விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆசிரியர் - Editor