பிக் பாஸ் பற்றி பிரபல நடிகைகள் அதிரடி கருத்து

பிக் பாஸ் பற்றி பிரபல நடிகைகள் அதிரடி கருத்து

சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய புத்தம் புது நிகழ்ச்சி பிக் பாஸ்.

பலவேறு சர்ச்சைகளை தாண்டி வெற்றிகரமாக முதல் சீசனை நடத்தி முடித்தது. வரும் ஜூன் 17-முதல் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனில் ராய் லட்சுமி கலந்து கொள்ள இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வைரலாகி கொண்டே இருந்து வருகிறது. ஆனால் இதனை தொடர்ந்து மறுத்து வந்த ராய் லட்சுமி ஒரு கட்டத்தில் கோபமடைந்து பிக் பாஸ் டீமை விளாசி இருந்தார். இதெல்லாம் டிவியும், நிகழ்ச்சி குழுவும் செய்யும் வேலை எனவும் தன் பெயரை தவறாக பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

bigg boss

இந்நிலையில் தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி தன்னை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டதாகவும் ஆனால் தான் வர முடியாது என மறுத்து விட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சமீபத்தில் அபர்ணதி பிக் பாஸ் வீட்டில் இருப்பது போல ஒரு எடிட்டிங் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor