காலா பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்

காலா பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருந்த காலா படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஜூன் 7ம் தேதி ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்புடன் வெளியாகி இருந்தது.

படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் வசூல் சற்று குறைவாகவே கிடைத்து இருந்தது. இதனையடுத்து வார இறுதியில் படத்தின் வசூல் அதிகரிக்க தொடங்கியது.

தற்போது மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூல் செய்து இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளிலும் காலா தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பது குறிப்பிடுத்தக்கது.

ஆசிரியர் - Editor