பிக் பாஸ் வீட்டில் அபர்ணதி

பிக் பாஸ் வீட்டில் அபர்ணதி

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து வரும் ஜூன் 17 முதல் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனில் 20 பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். சிம்ரன், கஸ்தூரி , சினேகா, ரியோ ராஜ், எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது அபர்ணதி பிக் பாஸ் வீட்டில் இருப்பது போல ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆனால் இது மார்பிங் போல தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழைத்தார்கள் ஆனால் மறுத்து விட்டேன் என அபர்ணதி பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor