பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் உடுகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுகம காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து சில துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் அகுரெஸ்ஸ பகுதியில் வசித்து வருபவர்கள் என்பதோடு, இன்றைய தினம் இவர்களை உடுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆசிரியர் - Editor II