பொலிஸாரின் வாகனம் மோதியதில் சிறுமி உட்பட மூவருக்கு ஏற்பட்ட நிலை!

பொலிஸாரின் வாகனம் மோதியதில் சிறுமி உட்பட மூவருக்கு ஏற்பட்ட நிலை!

மன்னார் பாஸார் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னார் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும், மன்னார் பஸார் பகுதியூடாக பயணித்த பொலிஸாரின் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய நபரும் அவருடைய மனைவி மற்றும், அவர்களுடன் சென்ற 6 வயது சிறுமி ஆகியோர் காயங்களுக்குள்ளான நிலையில் உடனடியாக மக்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, குறித்த பொலிஸ் வாகனத்தினை ஓட்டி வந்த பொலிஸ் சாரதியிடம் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II