ரேகாவிற்கு பிக்பாஸ் அனுப்பி வைத்த காதல் பரிசு… காதல் தோல்வியில் பிக்பாஸின் வயதை போட்டு உடைத்த நிஷா

ரேகாவிற்கு பிக்பாஸ் அனுப்பி வைத்த காதல் பரிசு… காதல் தோல்வியில் பிக்பாஸின் வயதை போட்டு உடைத்த நிஷா

ரேகா கேட்டதால் பிக்பாஸ் மத்தி மீன் கொடுத்ததை வைத்து பிக்பாஸை மரண கலாய் கலாய்த்தார் அறந்தாங்கி நிஷா. பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நாள் முதலே அறந்தாங்கி நிஷா, பிக்பாஸை காதலிப்பதாக கூறி வருகிறார். பெட்ரூம் கார்னரில் உள்ள கேமராவிடம் புரபோஸ் செய்து அதகளப்படுத்தினார்.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ரேகாவின் வேண்டுதலுக்கு இணங்க மத்தி மீனை ஸ்டோர் ரூமுக்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ். அதனை பார்த்து பூரித்துப் போன ரேகா.. அய்யோ பிக்பாஸ் மத்தி மீன் கொடுத்திருக்கார் என எல்லோரிடமும் கூறிக் கொண்டிருந்தார்.

அப்போது சக ஹவுஸ்மேட் ஒருவர் நீங்கள் கேட்டதும் மீன் கொடுத்துவிட்டாரே, மீனுக்குட்டியை பிக்பாஸ் காதலிக்கிறார் என்றனர். அதனை பிடித்துக் கொண்ட நிஷா, இதிலிருந்து என்ன தெரிகிறது? என அங்கிருந்த ஹவுஸ்மேட்டுகளிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.

பின்னர் பிக்பாஸோட வயசு தெரியுது என்று கூறியு நிஷா, ரேகா மேடம் கேட்பதை கொடுக்கும் போதே தெரிகிறது உன் வயசு என்னன்னு.. நான் கூட நீ சின்ன பையன்னு நினைச்சிட்டேன்டா.

என் காதலை நீ ஏத்துக்காததுக்கு அதான் காரணமா? இருந்தாலும் ஐ லவ் யூ.. உம்மா என மைக்கில் முத்தம் கொடுத்து ரகளை செய்தார். அறந்தாங்கி நிஷா பிக்பாஸின் வயசை வச்சு கலாய்த்தது ரசிக்கும் படியாக இருந்தது.

ஆசிரியர் - Editor II