சபாநாயகர் முகக்கவசம் அணியவில்லை- சஜித் குற்றச்சாட்டு

சபாநாயகர் முகக்கவசம் அணியவில்லை- சஜித் குற்றச்சாட்டு

பாராளுமன்றம் இன்று கூடிய போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முன்மொழியப்பட்ட சுகாதார நடைமுறைகளைச் சபாநாயகர் கூட பின்பற்றவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

மேலும் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுகாதார அமைச்சர் ஒக்டோபர் 15 ஆம் திகதி, விசேட வர்த்தமாணி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவேளி கட்டயமாக இருக்க வேண்டும் என்றும் இதனை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூறப்பட்டுள்ளது.மேலும் நாடாளுமன்றம் தற்போது கூடியுள்ள நிலையில், சமூக இடைவேளி என்பதை நாடாளுமன்றில் காண முடியாதுள்ளது.

இது சட்டத்தை மீறியுள்ள செயற்பாடாகும். சபாநாயகர் கூட முகக்கவசம் அணிந்துவரவில்லை. எனவே, அவரும் இந்த சட்டத்தை மீறியுள்ளார்.

இந்த சட்டத்தை இயற்றும் நாடாளுமன்றத்திலேயே இந்த நிலைமை இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, சுகாதார ஆலோசனைக்கு இணங்க நாடாளுமன்ற ஆசனங்களை ஒழுங்குப்படுத்தி, பின்னர் நாடாளுமன்றைக் கூட்டுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் - Editor II