இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய நிலவரம்..!

இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய நிலவரம்..!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது அதிகரித்து வரும் நிலையில் இன்று பல்வேறு இடங்களில் கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு லேடிரிட்ஜ்வே வைத்தியசாலையில் தாயும் இரண்டுவயது பிள்ளைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டியவை சேர்ந்த இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என கொழும்பு லேடிரிட்ஜ்வே மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கையாக அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியொன்றில் அனுமதித்து பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளஅவர் பிசிஆர் சோதனைகள் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ளன என தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தந்தைக்கே முதலில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மினுவாங்கொட ஆடைதொழிற்சாலை ஊழியர் ஒருவர் கலந்துகொண்ட திருமண நிகழ்விற்கு சென்றதன் காரணமாகவே தந்தை பாதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் பல பணியாளர்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் தொழிற்சாலையின் 35 பணியாளர்களும் அவர்களின் நெருங்கிய சகாக்களான 25 பேருமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

இதேவேளை கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் மேலும் 60 பேபேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 35 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியிருந்த 25 பேரும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு கொழும்பு கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று இனங்காணப்பட்டதாக இராணுவ தளபதி லெப் டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரி கொரோனா தொற்றாளராக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளளனர்

இதன்படி இலங்கையின் கொரோளா வைரஸ் தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 685 ஆகும்.இலங்கையில் இதுவரை கொரேனா தொற்றால் 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II