தை மாதம் முதல் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை

தை மாதம் முதல் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பொலிதீன் பாவனைகளினால் சூழல் மாசடைவதோடு பல்லாயிரம் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை விதிப்பதற்கு பல மாதங்களுக்கு முன் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவ்வாறு, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் ஆகியவற்றை 2021 ஜனவரி 1 முதல் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II