கொழும்பில் சீன தம்பதி ஒன்று செய்துவந்த மோசமான செயல்!

கொழும்பில் சீன தம்பதி ஒன்று செய்துவந்த மோசமான செயல்!

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக மதுபான வியாபாரம் நடத்திய வீட்டு வளாகம் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத மதுபான வியாபாரத்தினை சீன தம்பதியினர் நடத்தியதாக கூறப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்த பின்னர் தம்பதியினர் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டதாக
பொலிஸாரின் சோதனையைத் தொடர்ந்து தெரியவந்துள்ளது.

சட்டவிரோத மதுபானம் தயாரித்தல் மற்றும் சட்டவிரோத வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சீன தம்பதியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் - Editor II