கனடாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கிய இந்திய பெண்ணின் இன்றைய நிலை!

கனடாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கிய இந்திய பெண்ணின் இன்றைய நிலை!

கனடாவில் சுற்றுலாப்பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கிய இந்திய பெண் ஒருவர் தனது காயங்களால் ஏற்படும் வலியால் அனுதினமும் துடித்துவருவதாக தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம், கனடாவில் வசிக்கும் சில குடும்பத்தினரும், இந்தியாவிலிருந்து அவர்களை சந்திக்க சென்ற சில குடும்பத்தினருமாக சுமார் 11 பேர் உட்பட, மொத்தம் 27 பேர் கொலம்பியா பனிப்பாறையைக் காண்பதற்காக ஒரு சுற்றுலா பேருந்தில் சென்றனர்.

அந்த பேருந்து, காற்றில் குட்டிக்கரணம் அடித்து, பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்ததில், அந்த பேருந்தில் இருந்தவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள். இறந்தவர்களில் இருவர் இந்தியர்கள்.

அந்த கோர விபத்தில் ஸ்வேதா படேல் (27) மற்றும் அவரது கணவர் சூரஜ் (31) ஆகியோர் உயிர் பிழைத்தாலும், அவர்கள் படுகாயமடைந்திருந்தார்கள். ஸ்வேதாவின் மாமாவும் இறந்துபோனவர்களில் ஒருவர்.

ஸ்வேதாவுக்கு கழுத்து எலும்பு ஒன்று முறிந்துள்ளது. அவரது முகத்தில் உள்ள சில எலும்புகளும், விலா மற்றும் தோள் எலும்புகள் என மொத்தம் 20 இடங்களில் எலும்புகள் முறிந்துள்ளன.

அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது அவரை 24 மணி நேரமும் பார்த்துக்கொள்ள யாராவது உடன் இருக்கவேண்டும்.

சூரஜ்க்கு முதுகெலும்பு, விலா எலும்பு மற்றும் தோள் எலும்பு ஆகியவை உடைந்துள்ளன. மருத்துவத்துறையில் வேலை செய்துவந்த இருவருமே இப்போது வேலைக்கு செல்ல இயலாத நிலையில் இருக்கிறார்கள்.

பொருளாதார ரீதியில் இருவரும் கஷ்டப்படுவதாக தெரிவிக்கும் ஸ்வேதா, சுற்றுலா பயண ஏற்பாட்டாளர் விபத்தைத் தொடர்ந்து தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறுகிறார்.

தற்போது சூரஜ், ஸ்வேதா உட்பட விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த ஆறு பேர், 17 மில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி பயண ஏற்பாட்டாளர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

ஆசிரியர் - Editor II