உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த பெண் செய்த மோசமான செயல்

உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த பெண் செய்த மோசமான செயல்

கனடாவில் உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த பெண் அங்குள்ள உபகரணங்களை அடித்து உடைத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொரண்டோவில் அமைந்துள்ள குட் லைப் பிட்னஸ் என்ற உடற்பயிற்சி கூடத்துக்குள் 38 வயதான பெண் வந்துள்ளார்.

அங்கு அவர் உறுப்பினராக இல்லாத நிலையில் ஊழியர்கள் பெண்ணை வெளியில் போகும்படி கூறியுள்ளனர்.

இதையடுத்து கோபமடைந்த பெண் அங்கிருந்த ஒரு உடற்பயிற்சி உபகரணத்தை எடுத்து கண்ணாடிகள், மற்ற உபகரணங்களை அடித்து உடைத்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்த நிலையில் அவருக்கு அபராதமும் விதித்துள்ளனர்.

அந்த பெண் ஏன் இப்படி கோபமடைந்து மோசமாக நடந்து கொண்டார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

ஆசிரியர் - Editor