மருத்துவமனையில் தந்தையை பார்க்கச் சென்ற மாணவன் பரிதாப உயிரிழப்பு

மருத்துவமனையில் தந்தையை பார்க்கச் சென்ற மாணவன் பரிதாப உயிரிழப்பு

தமிழகத்தில் மருத்துவமனையில் இருக்கும் தந்தையை பார்க்கச் சென்ற மாணவன் ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்திருக்கும் சம்பவம் மாணவனின் குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் தர்மலிங்கத்திற்கு சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் போனதால், அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் தந்தையை பார்ப்பதற்கு செல்வகுமார் சின்ன சேலம் ரயில் நிலையத்திற்கு சென்று சேலம்-சென்னை ரயிலில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாரதவிதமாக ரயில் சக்கரத்தில் சிக்கிய அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார். சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பலியாகிய செல்வக்குமார் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor