பள்ளி மாணவியை தனியாக அழைத்துச் சென்று ஆசிரியர் செய்த செயல்

பள்ளி மாணவியை தனியாக அழைத்துச் சென்று ஆசிரியர் செய்த செயல்

தமிழகத்தில் நான்காம் வகுப்பு மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இலப்பவிளை பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த காஜா முகமது என்பவரின் மகள் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ராஜதுரை என்பவர் கடந்த வெள்ளிக் கிழமை அந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அந்த மாணவி மாலை வீடு திரும்பியவுடன் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

நடந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இன்று உடனடியாக பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தை அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த பொலிசார் ஆசிரியரை கைது செய்து அழைத்துச்சென்றனர்.

ஆசிரியர் - Editor