இலங்கையின் முதல் பெண் விமானி? மட்டக்களப்பு பெண் விமானியானார்? உண்மை என்ன?

இலங்கையின் முதல் பெண் விமானி? மட்டக்களப்பு பெண் விமானியானார்? உண்மை என்ன?

சமூக வலைத்தளங்களிலும், சில இணையங்களிலும் செய்தியை வேகமாக பரப்புகின்றோம், வேகமாக பகிர்கின்றோம் என்ற ஆர்வக்கோளாறில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை செய்திகளை வெளியிடும், அதனை உண்மையா? பொய்யா? சரியா? பிழையா? என சற்றும் சிந்திக்காமல் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

வேகமாக செய்திகளை அறிந்துகொள்ள வேண்டுமென வாசகர்களிடமிருக்கும் ஆர்வம், அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதில் இல்லை.

இப்படியான சம்பவமொன்றுதான் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது, சில இணைய செய்தி தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரே செய்தியை முரண்பாட்டுடன் உறுதிப்படுத்தாமல் வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றனர்.

இலங்கை வரலாற்றில் முதன் முதலில் விமானியாகும் யுவதி என்ற தலைப்பில் இலங்கையை பூர்வீகமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்ட அனுஷா சிறிரத்னா இலங்கையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

மறுபுறம் இலங்கையில் முதல் முறையாக முஸ்லிம் பெண் விமானியாகும் மட்டக்களப்பு யுவதி என்ற தலைப்புக்களில் காத்தான்குடியை பூர்வீகமாகவும் லண்டனை வசிப்பிடமாக கொண்ட றீமா பாயீஸ் இலங்கையின் “முதல் முஸ்லிம் பெண் விமானியானார் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த இவ்விரு செய்திகளிலும் ஒரே புகைப்படம்தான் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் ஒவ்வொரு செய்திக்கும் மாறுபடுகின்றது.

இதன் உண்மைத்தன்மையை தற்போது எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை, வெகு விரைவில் உண்மையை உறுதிப்படுத்தி வெளியிட முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த செய்திகளின் உண்மையைத்தன்மையை உறுதிப்படுத்தும் வரை தவறான செய்திகள், பதிவுகளை மற்றவர்களுக்கு பகிராமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
ஆசிரியர் - Editor II