வரலாற்றில் இன்று : 12.06.2018

வரலாற்றில் இன்று : 12.06.2018

ஜூன் 12  கிரிகோரியன் ஆண்டின் 163 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 164 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1429 – நூறாண்டுகள் போர்: ஜோன் ஒஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய இராணுவத் தளபதி தொமஸ் கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
1830 – 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.
1898 – பிலிப்பீன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1899 – ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநீலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
1902 – ஆஸ்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
1934 – பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
1935 – பொலீவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் ஜெர்மனியரிடம் சரணடைந்தனர்.
1943 – நாசி ஜெர்மனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.
1964 – தென்னாபிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
1967 – சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1987 – மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை அறிவிக்கப்பட்டது.
1990 – ரஷ்யக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து ரஷ்யாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.
1991 – போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
1991 – மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1998 – லெப்டினண்ட் கேணல் திருவடி நினைவுநாள்.
1999 – நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.
2003 – தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.
2005 – அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் ten bin bowling என்ற விளையாட்டினை ரொரண்டோவில் உலக சாதனைக்காக 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து விளையாடி தனது முப்பதாவது கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்.
2006 – கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.
2006 – காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1924 – ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர்
1932 – பத்மினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)
1942 – பேர்ற் சக்மன், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய உடற்றொழிலியலாளர்
1957 – ஜாவெட் மியன்டாட், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாளர்

இறப்புகள்

2014 – வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (பி. 1925)
2014 – கொடுக்காப்புளி செல்வராஜ், நகைச்சுவை நடிகர்

சிறப்பு நாள்

பிலிப்பீன்ஸ் – விடுதலை நாள்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
ரஷ்யா – ரஷ்ய நாள் (1990)

ஆசிரியர் - Editor